R. P. Sethu Pillai
அமிழ்தினும் இனிய தமிழ் மணம் கமழும் இத் திரு நாட்டில், தாய் மொழி அன்புதழைக்க வேண்டுமாயின் இளம்பருவத்தில் கல்வி கற்கும் மாணவர்க்கு இன் தமிழ்ச் சுவையை ஊட்டுதல் இன்றியமையாததாகும்.இந்நோக்கத்தோடு செந்தமிழ்த்தேன் சொரியும் சிலப்பதிகாரம், மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள், கலிங்கத்துப்பரணி, இராமலிங்க அடிகள் அருட்பா, முதலிய நூல்களினின்றும் சிந்தைக்கும் செவிக்கும் இனிய சில செஞ்சொற் கவிகளைத் தொடுத்து ’செந்தமிழ்மாலை’ என் னும் பெயரால் இச்சிறு நூலை வெளியிட்டுள்ளேன்.தமிழ் மணம் வீசும் தனிப்பூஞ்சோலையில் அன்புடன் கொய்த அருமலர்களாலாய இப்பாமாலையை இளைஞர் புனைந்து இன்புறவேண்டுகிறேன்.நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமேதெக்கணமும் அதிற் சிறந்த திரவிடநற் றிருநாடும்அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் [தமிழ் அணங்கே.