Pammal Sambandha Mudaliar
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என நமது தாய் பாஷையாகிய தமிழானது, மூவகையாய் நமது முன்னோரால் பிரிக்கப்பட்டது யாவரும் அறிந்த விஷயமே. ஆயினும் சற்றேறக் குறைய நாற்பது வருடங்களுக்கு முன், நாடகத்தமிழ் என்று ஒரு பிரிவு இருந்ததோ என்றே சந்தேகிக்கும்படியான கூணதிசைக்கு நமது தாய் மொழியாகிய தமிழ்மொழி வந்துவிட்டது. அச்சமயத்தில் நாடகத் தமிழைப்பற்றி எழுதப்புகுவான் ஒருவன், இவ்வாண்டு தேசத்தில் சர்ப்பங்களைப்பற்றி எழுதப்புகுவான் ஒருவன் ’இத்தேசத் தில் சர்ப்பங்கள் இல்லை’ என்று எழுதி முடித்ததைபோல், தமிழ் பாஷையில் நாம் அறிந்தவரை நாடகமே இல்லை, என்று ஒருவாறு எழுதி முடித்திருக்கலாம்.