Pammal Sambandha Mudaliar
சென்ன பட்டணம் இந்தியாவில் மிகவும் குறைந்த நாகரீகமுடைய நகரமென்று, கல்கத்தா பம்பாயிலுள்ள ஜனங்கள் ஏளனம் செய்கிறதாகக் கேள்விப்பட்டேன். இவ்விழிசொல் ஏற்றதா, இல்லையா, என்று பார்க்கும் பொருட்டுச் சென்னையிலுள்ள அநேக இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்தேன். முடிவில், 'அவ்விழி சொல் சென்னைக்கு ஏற்றதல்ல; சென்னையிலுள்ள சில விஷயங்கள் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களில் இல்லை' என்கிற தீர்மானத்திற்கு வந்தேன். அவைகளில் சிலவற்றைப் பற்றி அடியில் எழுதுகிறேன்.